For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மனியில் மலடாக்குதல் அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்க வேண்டும் - மனித உரிமை கழகம்

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு பலமுறை கைதாகும் நபர்களுக்கு அளிக்கப்படும், மலடாக்குதல் தண்டனை அளிப்பதைத் தடை செய்யுமாறு, ஐரோப்பிய மனித உரிமை கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெர்மன் நாட்டில் பாலியல் குற்றங்களில் தொடர்ந்து பல முறை கைதாகி வரும் குற்றவாளிகளுக்கு மலடாக்கும் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. இந்த வகையில் ஆண்டுக்கு குறைந்தது 5 பேராவது அறுவை சிகிச்சை மூலம் மலடாக்கப்படுகின்றனற். இதன்மூலம் மருத்துவ ரீதியாக பாலியல் அந்தக் குற்றவாளிகள் முடக்கப்படுகின்றனர். இதனால் வழக்கத்திற்கு மாறான பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியும் என்று ஜெர்மனி அரசு கூறப்படுகின்றது.

இது இன்று நேற்றல்ல, கடந்த 15ம் நூற்றாண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம். கடந்த 1970ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரைள் 104 பேருக்கு இப்படி மலடாக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 சதவீதம் பேர் மட்டுமே மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். ஆனால் மேற்கண்ட சிகிச்சை செய்யாமல் சிறை தண்டனையுடன் விடுவிக்கப்பட்ட 53 குற்றவாளிகளில், 46 பேர் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மனி அரசு தெரிவிக்கின்றது.

ஆனால் இது போன்ற தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய கவுன்சிலின் சித்திரவதை மற்றும் மனிததன்மையற்ற தண்டனைகள் தடுப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாலியல் குற்றவாளிகளுக்கு மலடாக்கும் அறுவை சிகிச்சை தேவையற்றது. இதனால் எதிர்மறையான விளைவுகள், மனம் மற்றும் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால் இது போன்ற தண்டனைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலடாக்கும் அறுவை சிகிச்சை தண்டனையை நிறைவேற்றும் மற்றொரு நாடான செக் குடியரசிடம், கடந்த 2009 பிப்ரவரி மாதம் இதேபோல கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதனை கண்டுகொள்ளாத செக் குடியரசு, தொடர்ந்து மலடாக்கும் தண்டனையை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றது.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் இந்த மலடாக்கும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Europe's top human rights watchdog, the Council of Europe, has urged Germany to end the practice of surgically castrating sex offenders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X