For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெனீவா தீர்மானம் நிறைவேறாமல் தடுத்துக் காப்பாற்றுங்கள்- மேனனுக்கு கோத்தபயா அவசர கோரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டின்போது தங்களுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை முறியடித்து தங்களைக் காக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனனுக்கு ராஜபக்சேவின் தம்பியான கோத்தபயா ராஜபக்சே அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேனனுடன் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். தொலைபேசி மூலம் இந்த அவசர உரையாடல் நடந்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது தெற்காசிய பிராந்தியத்தில் பல சிக்கல்களை உருவாக்கும் என்று மேனனுக்கு மறைமுகமாக எச்சரிக்கை கலந்த அறிவுரையையும் கோத்தபயா கொடுத்துள்ளாராம்.

கோத்தபயாவின் இந்த கெஞ்சல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை வட்டாரத்தில் மேனன் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை இலங்கைக்காக சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து வக்காலத்து வாங்கி வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு கொடுத்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை. இதனால் இந்தியாவும் சமீப காலமாக இலங்கை விவகாரத்தில் அதிருப்தியுடனேயே உள்ளது. இதுதான் இலங்கையை தற்போது கவலைக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Lankan defense secretary Gotabhaya Rajapakse had a telephonic talk with Indian external affairs secretary S S Menon seeking India's help to thwart US's resolution against the Island country in UNHRC summit in Geneva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X