For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்கரன்கோவிலில் தெடரும் தேர்தல் ஆணைய சோதனை: ரூ17 லட்சம் சிக்கியது

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகனச் சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.17 லட்சம் சிக்கியது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

சங்கரன்கோவில் சட்டசபை (தனி) தொகுதி இடைத்தேர்தலையொட்டி, பறக்கும் படையினர் ரோந்து பணியிலும், நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகனச் சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொகுதிக்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 25-ந் தேதி ரூ.10 லட்சத்தையும்,

தேவர்குளம் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒரு லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. குருவிகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 26-ந் தேதி ரூ.5 லட்சமும், சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 8 ஆயிரத்து 700 ரொக்கமும், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 5 மிக்சிகள், 7 குக்கர்கள், 4 மின்சார அடுப்புகள், 3 டின்னர் செட்டுகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இது தொடர்பான வழக்குகள் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ரொக்கம் மற்றும் பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் மீது, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Election authorities have seized Rs.17 lakhs of unaccounted money in cash from various places in Sankarankovil , election officials said..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X