For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர்செல்-மேக்சிஸ் பண பரிமாற்றம்: இங்கிலாந்து, மொரீசியஸ், மலேசியா, பெர்முடா நாடுகளின் உதவி கோரும் சிப

By Chakra
Google Oneindia Tamil News

Dayanidhi Maran
டெல்லி: எர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியபோது கைமாறிய கணக்கில் வராத பணம் பெர்முடா, இங்கிலாந்து, மொரீசியஸ், மலேசியா நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து சில நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து இந்த பணப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் கேட்டு பெர்முடா, இங்கிலாந்து, மொரீசியஸ், மலேசியா ஆகிய நாடுகளின் புலனாய்வு அமைப்புகளுக்கு சிபிஐ கடிதம் (letters rogatory) அனுப்பியுள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கடந்த ஆண்டு சிபிஐ முன் ஆஜராகி முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மீது பல பரபரப்பு புகார்களைக் கூறினார்.

தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸ் வழங்காமல் தாமதப்படுத்தியதாகவும், ஏர்செல்லை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தன்னை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கூறினார்.

இதையடுத்து ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும், விற்கப்பட்ட உடன் எர்செல் நிறுவனத்துக்கு தயாநிதி மாறன் லைசென்ஸ்கள் வழங்கியதாகவும் சிவசங்கரன் கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தில் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் சிவசங்கரன் புகார் தெரிவித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதையடுத்து தயாநிதி மாறன் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந் நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் ஏராளமான கணக்கில் காட்டப்படாத பணம் கை மாறியதாகவும் அது பெர்முடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் வழியாக மொரீசியஸ், மலேசிய நாட்டு நிறுவனங்களுக்கு சென்று அங்கிருந்து இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு வந்துள்ளதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐயின் வெளிநாட்டு பணம் பரிமாற்ற விசாரணைப் பிரிவு இந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் உதவி கேட்டு கடிதங்கள் அனுப்பியுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்கள் மூலம் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

English summary
In a bid to get legal assistance for finding the elusive money trail in the Maran-Aircel Maxis case, the Central Bureau of Investigation (CBI) has despatched Letters Rogatory (LRs) to four countries. Highly placed CBI sources said the agency had sent LRs to Malaysia, Mauritius, Bermuda and another tax haven where alleged payoffs related to the deal were sent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X