பாட்னா வங்கியில் ரூ.17.96 லட்சம் கொள்ளை: கொள்ளையர்கள் எஸ்கேப்
பாட்னா: சென்னையைப் போன்று பாட்னாவில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றில் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ரூ.17.96 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
சென்னையில் 2 வங்கிகளில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கனரா வங்கி ஒன்றில் 6 கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
பீகார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள பிக்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரேவ் என்ற இடத்தில் கனரா வங்கியின் கிளை செயல்படுகின்றது. இங்கு நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் 4 மோட்டார் சைக்கிள்களில் 6 கொள்ளையர்கள் வந்தனர்.
இதில் வங்கியின் வெளியே நின்ற ஒருவர் மட்டும் முகமூடி அணிந்து கொள்ள மற்ற 5 பேரும் வங்கியின் உள்ளே வாடிக்கையாளர்களை போல நுழைந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து வங்கி மேலாளர் ஆர்.கே.செளத்ரி உள்ளிட்ட பணியாளர்களை ஒரு அறையிலும், அங்கிருந்த வாடிக்கையாளர்களை இன்னொரு அறையிலும் அடைத்தனர்.
அதன் பிறகு காசாளரை மிரட்டி வங்கியில் இருந்து ரூ.17.96 லட்சம் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அடைக்கப்பட்ட அறைகளை கொள்ளையர்கள் வெளியே தாளிடவில்லை. இதனால் சிறிது நேரத்தில் அறைகளில் இருந்து வெளியே வந்த வங்கி அதிகாரிகள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எஸ்.பி.மனோஜ் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் பணம் கேட்டு காசாளரையும், மேலாளரையும் மிரட்டியதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications