ஈழப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இந்தியா கைவிட்டு விட்டது-டி.ராஜா

Subscribe to Oneindia Tamil

D Raja
டெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையைப் பார்க்கும்போது ஈழத்தில் நடந்த போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தியா கைவிட்டு விட்டதாகவே தெரிகிறது. இதை நாங்கள் நாடாளுமன்றத்தில் பிரச்சினையாக எழுப்புவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், குடியரசுத் தலைவரின் உரை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களுக்கு எதிர்காலம் மீது நம்பிக்கையூட்டும் வகையில் அது அமையவில்லை. வெளிநாட்டுக் கொள்கைகள் என்று வரும் போது, பல்வேறு நாடுகளுடனான தமது உறவின் நிலை அந்த உரையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கை என வரும் போது, மீண்டும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பகுதியில் வசிப்பவருக்கு அரசியல் தீர்வு பெற்றுத்தர முயற்சிப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

அதேபோல், இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து தனது நிலையைப் பதிவு செய்யாமல் இந்தியா இருந்துள்ளது. இதன் மூலம் இந்தப் பிரச்னையை இந்தியா ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது தெளிவாகி விட்டது. இந்த செயல் கண்டனத்துக்குரியது.

இலங்கையில் நடைபெற்ற அனைத்தையும் அறிந்த நட்பு நாடு இந்தியா. அதற்கு உதவி செய்து வரும் நாடாகவும் விளங்கி வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்குத் தான் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் குடியரசுத் தலைவரின் உரையை பார்க்கும் போது, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இந்தியா கைவிட்டு விட்டது. அதனால் நாங்கள் தொடர்ந்து இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்போம் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+