For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2012: பர்ஸை பதம் பார்க்கும் பொருள்கள் என்னென்ன?

By Shankar
Google Oneindia Tamil News

Union Budget Price Hike
டெல்லி: பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெரும்பாலான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு சில பொருள்களின் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் ஆர்வம் காட்டும் பொருள்களின் விலையில்தான் பிரணாப் கை வைத்துள்ளார்.

ஏஸி, பிரிட்ஜ் போன்றவை மிக அத்தியாவசியமானவையாகவே மாறிவிட்டன, நடுத்தர வர்க்கத்தினருக்கு. இவற்றின் விலை கணிசமாக உயரப் போகிறது.

மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள் விலை மற்றும் போன் கட்டணங்களும் உயரவிருக்கின்றன. சிகரெட் விலை வழக்கம்போல இந்த பட்ஜெட்டிலும் உயர்த்தப்பட்டுள்ளது (என்னதான் சிகரெட்டே கதி என்று கிடக்கும் அறிவு ஜீவியாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் வெளிப்படையாக கண்டிக்க முடியாது என்ற நம்பிக்கை அரசுக்கு!). பீடி விலையும் உயர்கிறது!

கார்களின் விலையும் இந்த பட்ஜெட் மூலம் உயர்கிறது. காரணம், ஆடம்பர, பெரிய வகைக் கார்களுக்கான எக்ஸைஸ் வரிகள் 24 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சும்மாவே, சர்வதேச மார்க்கெட் நிலவரம் என்ற காரணத்தைக் கூறிக்கொண்டு தங்கத்தின் விலையை ஏற்றிக் கொண்டிருந்தனர். இப்போது தங்கத்தின் சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுவிட்டதால், இனி தங்கம் விலை கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.

வைரம், ரூபி, பிளாட்டினம், எமரால்டு போன்ற ஆபரண கற்கள் விலை உயர்ந்துள்ளது. அதேபோல, பிராண்டட் ஆயத்த ஆடைகள் விலை உயர்கிறது.

ஓட்டல் உணவுகள், விமானப் பயணங்கள் இந்த பட்ஜெட் மூலம் காஸ்ட்லியாகியுள்ளன. ஏற்கெனவே சாமானியர்கள் பயணிக்க முடியாத அளவுக்கு மீண்டும் விமானக் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. பிரணாப்பின் இப்போதைய அறிவிப்பு இந்தக் கட்டணங்களை மேலும் உயர்த்தியுள்ளது.

இன்னும் சேவை வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், அனைத்துப் பொருள்களின் விலைகளும் தாமாகவே உயரப் போகின்றன.

விலைக்குறைப்பு என்று பார்த்தால் மிகச் சில பொருள்களுக்குத்தான்.

எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், படச்சுருள், வீட்டுவசதி வாரிய கட்டணங்கள், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால், இவற்றின் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்புள்ளது.

English summary
Pranab Mukherjee, while presenting the Union Budget 2012-2013 proposed to increase duty on large cars and refined gold and remove any duty on import of silver. Here is a look at what goes up and what goes down. AC, gold jewelery, refrigerator, luxury cars, telephone bills, SUVs and cigarettes, handrolled beedis, platinum, diamond, emerald, ruby and branded retail garments to cost more. Cinema and films, LCDs and LEDs, bicycles, housing society charges, LPG, mobile phones, school education, iron ore quipment and medicines for treating cancer and HIV to cost less now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X