For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் டிவி சேனல்களால் பத்திரிக்கை துறைக்கு பாதிப்பில்லை - மத்திய அரசு தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தற்போது செயல்பட்டு வரும் 800 டிவி சேனல்களால் பத்திரிக்கை துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை செயலாளர் உதய் வர்மா கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது

தொலைக்காட்சி, இணைய தளம் போன்ற மின்னணு ஊடகங்கள் வளர்ந்து வரும் நிலையில், பத்திரிக்கைகளுக்கான வரவேற்பும் மிக சிறப்பாக உள்ளது. ஆனால் மின்னணு ஊடகங்கள் மக்களை முழுமையாக திருப்திப்படுத்த போதுமானதாக இல்லாத நிலையில் பாமர மக்களிடையே பத்திரிக்கையின் தேவை அவசியமாக உள்ளது.

இந்த வகையில் மின்னணு ஊடகங்களின் வளர்ச்சி பத்திரிக்கை துறையை அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மேலை நாடுகளில் மின்னணு ஊடக வளர்ச்சியின் காரணமாக பத்திரிக்கை துறை சரிய தொடங்கி உள்ளது. இந்தியாவில் தற்போது 800 டிவி சேனல்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 200 டிவி சேனல்கள் வர உள்ளன என்றார்.

English summary
Central Information and Broadcasting Department secretary Uthaya Varma said that, Now 800 TV channels are operates in India. Still 200 TV channels to be introduced soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X