For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரை விரும்பாத பேஸ்புக் இஸ்ரேலியர்கள்- "ஈரானியர்களே வி லவ் யூ"

By Mathi
Google Oneindia Tamil News

Iranians, we love you
டெல் அவிவ்: எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான் "Iranians, we love you" என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர்.

இப்போது "Iranians, we love you" என்ற பக்கத்தை "லைக்" செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது!

எட்ரிஸ் தம்பதியினர் இது பற்றி கூறுகையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்தான் பேஸ்புக்கில் பதிவைத் தொடங்கினோம். "ஈரானியர்களே நாங்கள் உங்களை நேசிக்கிறோம்... நாங்கள் உங்கள் நாட்டின் மீது ஒருபோதும் குண்டுவீச மாட்டோம்" என்று அதில் பதிவு செய்திருந்தோம். இப்போது கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை. எங்களது பக்கம் இத்தனை ஆயிரம் பேரை ஈர்த்திருக்கிறது என்பது நிச்சயம் நம்ப முடியாத ஒன்றுதான்" என்கின்றனர்.

இருப்பினும் தொடக்கத்தில் தமது நண்பர்கள் பலரும் இது வேண்டாத வேலை என்று எச்சரித்ததாகவும் ஈரானியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது எனவும் கூறினர். ஈரான் மீதான போரை உங்களால் தடுத்துவிட முடியாது என்றும் அறிவுறுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வலைதளத்தில் ஈரானைச் சேர்ந்தவர்களும் கூட "இஸ்ரேலியர்களை நாங்கள் எதிரியாகப் பார்க்கவில்லை...வி லவ் யூ" என்று பதில் பதிவை வெளியிட்டுள்ளனர்.

ஒரு போரை முன்னெடுத்துச் செல்ல சமூக வலைதளங்கள் ஆயுதமாகும்போது ஆயுதங்களை "மெளனிக்க" செய்யவும் வலைதளங்கள் ஆயுதங்களாகட்டுமே!

English summary
Iranians, we love you: Israeli Facebook page Jerusalem: A new Facebook initiative has been launched by Israelis to reach out to Iranians to show them that despite tensions, the majority of Israelis do not want war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X