ராணுவ தளபதி வி.கே.சிங்கை நீக்க நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தல்

ராணுவத்துக்கு தரமற்ற 600 வாகனங்களை கொள்முதல் செய்ய ஒப்புக் கொண்டால், தனக்கு ரூ.14 கோடி லஞ்சம் பெற்று தருவதாக தன்னிடம் முக்கிய நபர் ஒருவர் பேரம் பேசினார் என்று ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.
மேலும் ராணுவ அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றி குறை கூறி பிரதமருக்கும் அவர் கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தினால், நாடாளுமன்றத்தில் 2 நாட்களாக புயல் வீசி வருகிறது.
இன்று பாராளுமன்றம் கூடியதும் இந்த விவகாரம் பிரதான இடத்தை பிடித்தது. சிலர் லஞ்ச பேரம் பற்றி பேச, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சி எம்.பி.க்.கள், ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்கள், ராணுவ தளபதி வி.கே.சிங் தனது பதவிக்குரிய கடமையையும், கட்டுப்பாட்டையும் மீறி நடந்து கொண்டுள்ளார்.ராணுவத்தின் செயல்பாட்டை குறை கூறி, பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியது வரம்பு மீறிய, கண்ணியம் தவறிய செயல். எனவே ராணுவ தளபதி பதவியில் இருந்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தெலுங்கானா பிரச்சினையை எழுப்பி, ஆந்திர எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ராணுவ தளபதி குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்கிறது? என்று கேட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கடும் அமளியால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications