'டைம் டாப் 100 மனிதர்கள்' பட்டியலில் இடம் பெற மோடி மோசடி-காங்.

இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,
குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆம் பட்டனை அழுத்துமாறு பொதுமக்களை மோடியின் மக்கள் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். உலகில் எந்த தலைவரும் மோடியைப் போன்று செய்ததில்லை. இதெல்லாம் டைம் இதழின் பட்டியலில் வரவேண்டும் என்ற சாதாரண காரணத்துக்காகத்தான்.
மோடிக்கு ஆதரவு பெருகுவது போலத் தெரிந்தாலும், அவருக்கு நோ சொன்னவர்களும் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 38,586 ஆகும்.
மோடியைப் போல ஒரு மோசடிக்காரர் யாருமே இருக்க முடியாது. குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட்டிலிருந்து 16,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
மோடி விழாக்களுக்கு எப்படிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், பாஜகவுக்காக எப்படி நிதி வசூலிக்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் போலீஸாருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வழங்குகிறார்கள் என்றார் அவர்.
முதலிடத்தில் மோடி
டைம் இதழ் தற்போது தனது ஆன்லைன் சர்வே மூலம் உலகின் டாப் 100 சக்தி வாய்ந்த மனிதர்களைத் தேர்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது நரேந்திர மோடி முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இதுவரை 1,46,465 வாக்குகள் கிடைத்துள்ளன. நோ சொன்னவர்களும் அதிகம்தான். அதாவது 56,859 ஆகும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications