ஒபாமா மூட்டை, முடிச்ச கட்ட ஆரம்பிங்க: சொல்கிறார் ரோம்னி

Subscribe to Oneindia Tamil

Obama
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி தற்போதைய அதிபர் பாரக் ஒபாமாவை மூட்டை முடிச்சுகளை கட்ட ஆரம்பிக்குமாறு தெரிவி்ததுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இந்நிலையில் ஏபிசி நியூசிற்கு பேட்டியளித்த ரோம்னியிடம் அதிபர் ஒபாமாவுக்கு ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில்,

உங்கள் பொருட்களை பேக் பண்ண துவங்குங்கள் என்று தான் சொல்ல விரும்புகிறேன். ஒபாமா மீண்டும் 4 ஆண்டுகள் பதவியில் இருக்க விரும்புகிறார் என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் என்ன செய்ய. அவர்கள் வேலைவாய்ப்பை பெருக்கவில்லை, வருமானத்தை அதிகரிக்கவில்லை, மாறாக அவர்கள் கோடிக்கணக்கில் கடன் வைத்துள்ளனர்.

ஒபாமா அமெரிக்காவை தவறான பாதையில் அழைத்துச் சென்றுள்ளார். அவர் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வார் என்றார்.

ரோம்னி தான் தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருப்பது அவரது பேச்சு மூலம் தெரிகிறது.

இது மிட்டின் நேரம் என்று நான் நம்புகிறேன். இது எங்கள் முறை என்று ரோம்னியின் மனைவி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+