For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்... மக்கள் பக்திப் பரவசத்துடன் கோலாகலம்

Google Oneindia Tamil News

Madurai Meenakshi amman
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மீனாட்சி அம்மனுக்கு மதுரையின் அரசியாக பட்டம் சூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தேறியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்மனும், சுவாமியும் மேலமாசிவீதி கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளினர். அபிஷேகத்திற்கு பின், அம்மனுக்கு பரிவட்டம் மட்டும் சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலுக்கு புறப்பாடு நடந்தது.

மாலையில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில், திருமலை நாயக்கர் வழங்கிய ரத்தன கிரீடத்திற்கு அபிஷேகம் நடந்தது. இரவு 7.50 மணிக்கு அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பின் அம்மனுக்கு பரிவட்டமும், வெற்றிக்கு அறிகுறியாக வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது.

இரவு 8 மணிக்கு மேல் அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகளில் உலா வந்தார்.

இன்று திக்குவிஜயம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று திக்குவிஜயம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை திருக்கல்யாணம்

நாளை முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மீனாட்சி அம்மனுக்கும், சொக்கநாதப் பெருமானுக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

English summary
Pattabishekam was held in a grand manner in Madurai Meenakshi Amman temple yesterday. Today tikku vijayam will be held and Thirukalyanam event is slated for tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X