For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் 'கிறித்துவர்' ஜெகன்மோகன் எப்படி சாமி தரிசனம் செய்யலாம்?: பாஜக

By Mathi
Google Oneindia Tamil News

Jagan Mohan Reddy
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கிறித்துவரான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உரிய விதிகளை ஏற்காமல் சாமி தரிசனம் செய்ய அனுமதித்ததாகக் கூறி தேவதஸ்தான நிர்வாகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல்

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உட்பட மொத்தம் 12 சட்டப்பேரவைகளுக்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜெகனுக்காக ராஜினாமா செய்தவர்களால்தான் இந்த இடைத்தேர்தலே நடைபெறுகிறது என்பதால் ஜெகன்மோகன் ரெட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஆளும் காங்கிரஸ் கட்சியும் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வருகிறது. காங்கிரஸ் வாக்குகள் சிதறும் நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க சந்திரபாபு நாயுடு தேவுடு காத்து வௌர்கிறது.

ஜெகனை உசுப்பிய நாயுடு

இந்நிலையில் சமீபத்தில் திருப்பதியில் பிரச்சாரம் செய்த சந்திரபாபு நாயுடுதான் ஜெகனை திருப்பதிக்கு வருமளவுக்கு உசுப்பிவிட்டுப் பேசினார். கிறித்துவ மதத்தைச் சேர்ந்த ஜெகன் ஒருநாத்திகர் ... டெல்லியில் இருந்து சோனியாவெல்லாம் வந்து சாமி கும்பிடுகிறார்.. ஆனால் ஜெகன் மட்டும் வந்து சாமிகும்பிடமாட்டார். இப்படிப்பட்டவர்களிடமாக ஆட்சியை ஒப்படைக்கப் போகிறீர்கள் என்று சந்திரபாபு நாயுடு பேசியதுதான் தாமதம்.

படை பரிவாரங்களுடன் ஜெகன்

ஜெகன்மோகன் ரெட்டி தமது படைபரிவாரங்களைத் திரட்டிக் கொண்டு திருப்பதி கோயிலை முற்றுகையிட்டார். இந்துக்கள் அல்லாதோர் சாமி தரிசனம் செய்வதற்காக இருக்கும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுவிட்டுத்தான் உள்ளே செல்ல முடியும்.

ஆனால் ஜெகனும் அவரது பரிவாரங்களும் எல்லாம் 2009-ம் ஆண்டே இந்த மாதிரி கையெழுத்து போட்டாச்சு...ஒவ்வொருதடவையும் போடமுடியாது.. சோனியாகிட்ட கையெழுத்தா வாங்கினீங்க..என்று எகிறியபடியே கோயிலை வலம் வந்தனர்.

சுமார் 3 மணி நேரம் ஜெகனும் அவரது ஆதரவு அடிப்பொடிகளும் திருப்பதியில் திவ்ய தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிட்டனர்.

புதிய சர்ச்சை

இப்போது விவகாரம் வேறுவகையில் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. திருப்பதி கோயிலுக்கு என்று உள்ள அனைத்து பாரம்பரியங்களையும் ஜெகன்மோகன் ரெட்டி மீறிவிட்டதாகவும் அவரை எப்படி கோயிலுக்குள் தேவஸ்தானம் அனுமதித்தது என்றும் பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆந்திர இடைத்தேர்தலில் திருபத்தி தேவஸ்தானமும்கூட சந்திக்கு வரும் என்பதில் விதிவிலக்கு அல்லபோல்!

English summary
YSR Congress Party president and Kadapa MP YS Jagan Mohan Reddy landed in a controversy when he went in for a darshan of Lord Venkateswara at Tirumala without signing the formal declaration of his faith in the Lord as required by temple rules for non-Hindus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X