For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுக்கோட்டை இடைத் தேர்தல்: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏவாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

அதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17ம் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

ஆனாலும் கடந்த இரு தினங்களுக்கு முன் தேர்தல் குறித்தும் வேடாபாளர் குறித்தும் ஆலோசனை நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி ஆகியோரை சென்னைக்கு அழைத்து மூத்த நிர்வாகிகளுடன் சேர்ந்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

இதில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஆனால், தேர்தலை புறக்கணிக்கலாம் என்றும் சில மூத்த நிர்வாகிகள் கூறினர்.

இந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து தேர்தல் தேதியை நிர்ணயித்துள்ளனர். இதனால் புதுக்கோட்டை இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்றார்.

(தேர்தல் தேதியை ஆணையம் மாலையில் அறிவிக்க, வேட்பாளரை அதே நாள் காலையில் அதிமுக அறிவித்தது நினைவுகூறத்தக்கது)

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பாமகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாக்கியுள்ள முக்கிய கட்சி தேமுதிக தான். அவர்களும் இங்கு போட்டியிட வாய்ப்பு மிகக் குறைவே.

English summary
DMK has decided not to contest the by-election to the Pudukottai Assembly constituency, Karunanidhi Said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X