இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் ஒபாமாவுக்கு ஏகபோக ஆதரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Obama
வாஷிங்டன்: இந்திய அமெரிக்கர்கள் மத்தியிலும், சீன அமெரிக்கர்கள் மத்தியிலும் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதேசமயம், இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பில் உள்ளவரான மிட் ரோம்னிக்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் நிலவுகிறது.

லேக் ரிசர்ச் பார்ட்னர்ஸ் மற்றும் APIAVote என்ற அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டோபி செளத்ரி கூறுகையில், இந்திய அமெரிக்கர்களில் 85 சதவீதம் பேர் ஒபாமாவை ஆதரிக்கின்றனர். 8 சதவீதம் பேர் மட்டுமே ரோம்னியை ஆதரிக்கின்றனர்.

இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் ஒபாமாவுக்கு பெருத்த ஆதரவும், வரவேற்பும் காணப்படுகிறது. அதேபோல சீன அமெரிக்கர்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு காணப்படுகிறது. 68 சதவீத சீன அமெரிக்கர்கள் ஒபாமாவை ஆஐதரிக்கின்றனர். 8 சதவீதம் பேர் ரோம்னியை ஆதரிக்கின்றனர்.

இருப்பதிலேயே பிலிப்பினோ அமெரிக்கர்கள்தான் ஒபாமாவுக்கு சற்று எதிர்ப்பாக உள்ளனர். அவர்கள் மத்தியில் 57 சதவீதம் பேர் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் எதிர்ப்பு ரோம்னியை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.

அதேபோல சாதகமான வேட்பாளராக யாரைக் கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கும் இந்தியர்கள் ஓட்டு ஒபாமாவுக்கே. 51 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒபாமாவ ஆதரித்துள்ளனர். ஆசியர்கள் மத்தியில் ஒபாமாவுக்கு 34 சதவீத ஆதரவு காணப்படுகிறது.

அதேசமயம் வெறுக்கக் கூடிய வேட்பாளராக ரோம்னிக்கு 56 சதவீத இந்தியர்கள் வாக்களித்துள்ளனர். இது ஆசியர்கள் அளவில் 44 சதவீதமாக உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Indian-American community has come out in strong support of US President Barack Obama, who kicked off his re-election campaign with two rallies in Ohio and Virginia, with an overwhelming 85 per cent of them favouring a second term for him. About 85 per cent of the Indian-Americans support Obama for a second term, according to a latest survey conducted by Lake Research Partners, a DC-based political consultancy firm, with APIAVote. APIA stands for Asian American Pacific Islander.
Please Wait while comments are loading...