அம்பேத்கர் கேலிச் சித்திர விவகாரம்: ராஜினாமா செய்த என்.சி.இ.ஆர்.டி. ஆலோசகர் அலுவலகம் சூறை

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ambedkar cartoon
புனே: மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (சி.பி.எ.ஸ்.இ) அம்பேத்கரை அவமானப்படுத்தும் வகையிலான கேலிச்சித்திரம் இடம்பெற்ற சர்ச்சையில் பதவி விலகிய என்.சி.இ.ஆர்.டி ஆலோசர் சுகாஷ் பல்ஷிகாரின் அலுவலகம் சூறையாடப்பட்டது.

பிளஸ் ஒன் பாடப்புத்தகத்தில் அம்பேத்கர் கேலிச் சித்திரம் இடம்பெற்றதற்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கபில்சிபல் மன்னிப்பு கோரினார். இதைத் தொடர்ந்து சுகாஷ் பல்ஷிகார், என்.சி.இ.ஆர்.டி ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார். இவர்கள் ஒப்புதலுடன்தா அந்த கேலிச்சித்திரம் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் சுகாஷ் நிற்கவில்லை. நாடாளுமன்ற அமளி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், துரதிருஷ்டவசமானது. நாட்டில் ஜனநாயகத் தன்மை என்பது மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்று காட்டத்தையும் வெளிப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய குடியரசு சிறுத்தைகள் கட்சியினர் புனே பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அக்கட்சித் தொண்டர்கள் சுகாஷின் அலுவலகத்தை சூறையாடி துவம்சம் செய்தனர். இதில் சுகாஷூக்கு காயம் ஏற்படவில்லை. அவரை போலீசார் பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A group of persons on Saturday ransacked the office of Prof Suhas Palshikar, who resigned as NCERT adviser in the wake of the row over cartoon of BR Ambedkar in school text books.
Please Wait while comments are loading...