For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸூடன் போரா? - சீனா விளக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தென்சீனக் கடலில் ஹூவாங்யன் தீவுக்கு யாருக்கு உரிமையானது என்ற பிரச்சனையில் பிலிப்பைன்ஸ் நாட்டுடன் போருக்கு தயாராகிவருவதாக வெளியான செய்திகளை சீனா மறுத்துள்ளது.

தென்சீனக் கடலில் பல நூறு சிறு சிறு தீவுகள் உள்ளன. எண்ணெய்வளமிக்க பகுதி என்பதால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் சீனாவோ ஒட்டுமொத்த தென்சீனக் கடலுமே தங்களுக்கு மட்டுமே சொந்தம் என அடம்பிடித்து வருகிறது.

அண்மையில் இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையேயான மோதல் விஸ்வரூபமெடுத்தது. ஹூவாங்யன் தீவு அருகே சீனாவின் படகுகளை பிலிப்பைன்ஸ் தடுப்பதும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் படகில் சீனா சோதனையிடுவதும் என விவகாரம் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

மேலும் பிலிப்பைன்ஸின் சீனாவுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. இருநாட்டு போர்க் கப்பல்களும் கடந்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஹூவாங்யன் தீவுப் பகுதியில் முகாமிட்டிருக்கின்றன. சீனாவோ பிலிப்பைன்ஸுக்கு எதிராக முழுமையான பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறது. அந்நாட்டுக்கு சுற்றுலாவுக்கு எவரும் செல்லக் கூடாது. அந்நாட்டில்லிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் சீனா தடை விதித்திருக்கிறது. பிலிப்பைன்ஸைப் பொருத்தவரையில் சீனா 3-வது முக்கிய வர்த்தக உறவில் உள்ள நாடு. இதனால் பிலிப்பைன்ஸ் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்த பிரச்சனையை எடுத்துச் செல்லப் போவதாகவும் தமக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளை திரட்டப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த விவகாரத்தில் பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளித்து வருகிறது. பிலிப்பைன்ஸ்- சீனா இடையே மோதல் நிலை இருந்தபோது அமெரிக்க கடற்படை அதே கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியை பிலிப்பைன்ஸூடன் நடத்தியிருந்தது. இந்தியாவும் பிலிப்பைன்ஸின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் வகையில் தென்சீனக் கடல் உலகின் பொதுச்சொத்து என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸூடன் ஒரு முழுமையான போருக்கு சீனா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் சீன பாதுகாப்பு அமைச்சகம் இதனை முற்றாக மறுத்துள்ளது.

English summary
China has refuted reports that its military was increasing combat readiness in response to a standoff with the Philippines over the disputed islands in South China Sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X