பணமில்லாத மமதா அரசு ரூ.20 கோடியில் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டம்: சிபிஎம்
கொல்கத்தா: பணக் கஷ்டத்தில் உள்ளோம் என்று கூறும் மமதா பானர்ஜி அரசு ரூ.20 கோடி செலவழித்து ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியுள்ளது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்த ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்கு அரசு ரூ. 20 கோடி செலவு செய்துள்ளது என்று சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ரூ.2 லட்சம் கோடி கடன் சுமை இருக்கிறது. அதனால் நிதி பற்றாக்குறையாக உள்ளது என்று புகார் கூறும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு ஓராண்டு நிறைவு விழாவைக் கொண்டாட ரூ.20 கோடி செலவு செய்துள்ளது. இந்த ரூ.20 கோடியை ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பயன்படுத்தியருக்கலாம். மாநிலத்தில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்திருக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் உள்ள நிலையைப் பார்த்தால் சிபிஎம் உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்காலத்தில் பொதுமக்களும் தாக்குதலுக்குள்ளாவார்கள் என்றார்.
சிபிஎம் உறுப்பினர்களை ஆளுங்கட்சியினர் தாக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறித்து தான் யெச்சூரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications