For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் பந்த்- தமிழக பஸ்கள் நிறுத்தம்

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்திய வரலாற்றில் முதல் முறையாக கடுமையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இதனால் தமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ7.50 என எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு இடதுசாரிகளும் பாரதிய ஜனதாவும் அழைப்பு விடுத்திருந்தன.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. மாநிலத்தில் இதுவரை வன்முறை ஏதும் நிகழவில்லை.

தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் எல்லையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.

English summary
The dawn-to dusk hartal called separately by LDF and BJP in Kerala to protest the increase in petrol price partially affected normal life across the state today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X