For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம்..ஹூம்.... பாகிஸ்தான் மாறினால்தான் ஆப்கானிஸ்தானில் அமைதி வரும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

By Mathi
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் தலிபான்களின் ஹக்கானி குரூப்புக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வரும் வரை அந்நாட்டில் அமைதி திரும்பப் போவதில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பெனட்டா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ள பெனட்டா தலைநகர் காபூலில் ஆப்கன் அமைச்சர் அப்துல் ரஹீமுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நேட்டோ படைகளின் விமானப் படை தளம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலை சுட்டிக்காட்டிப் பேசிய பெனட்டா, பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வரும் நிலையில் ஆப்கானில் அமைதியை உருவாக்க முடியாது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். இதே மாதிரி பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்தால்.;... எங்களோட பொறுமைக்கும் எல்லை இருக்கிறது என்றார் அவர்.

பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவும் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில் ஆப்கான் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை கூடுதலாக எதிர்பார்ப்பதாக அமெரிக்கா ஏற்கெனவே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
In a comment which could further strain Washington-Islamabad ties, US Defence Secretary Leon Panetta on Thursday said that his country is reaching its limit of patience with Pakistan to eradicate the terrorist Haqqani network.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X