For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது: நித்தியானந்தா

Google Oneindia Tamil News

Nithyanantha
பெங்களூர்: எங்களுக்கு எதிரான வன்முறையை சட்டத்தின் துணையுடன முறியடித்து வெல்வோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. எங்களது ஆசிரம செயல்பாடுகள் தொடரும் என்று நித்தியானந்தா கூறியுள்ளார்.

கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். எங்கிருந்து இது வெளியிடப்பட்டது என்று தெரியவி்ல்லை. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் கடந்த சில காலமாக தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குப் போய் வந்து கொண்டு்ள்ளேன். தொடர்ந்து பயணத்தில் உள்ளேன். மதுரை ஆதீன மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நான் பிடதி ஆசிரமத்திற்கு வரவில்ல.

பெங்களூருக்குக் கூட ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே வந்திருந்தேன், அதுவும் கூட சில முக்கியப் பணிகளைக் கவனிக்கவும், சில விஷயங்களை பத்திரிக்கையாளர்களிடம் விளக்கவுமே.

பிடதி ஆசிரமத்தில் சில சட்டவிரோதிகள் நிகழ்த்திய பிரச்சினை குறித்து நான் கேள்வி்ப்பட்டேன். இருப்பினும் பிடதி மற்றும் ராமநகர போலீஸாரின் துரித தலையீட்டால் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது.

எனது பக்தர்களுக்கும், எங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடும் சட்டவிரோதிகளுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்று மட்டுமே...

- நாங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் ஆன்மீகப் பணிகளையும், சமூகப் பணிகளையும யாரும் ஒருபோதும் தடுத்து நிறுத்தி விட முடியாது. எங்களது அனைத்து அறப் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். அன்னதானம் தொடர்ந்து நடைபெறும்.

- கடவுள் மீதும், சட்டத்தின் மீதும், கர்நாடக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. கர்நாடக மக்கள் என்னை எதிர்க்கவி்ல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். சில சமூக விரோதிகள்தான் தங்களது சுயலாபத்துக்காக, மலிவான விளம்பரத்துக்காக இதை செய்கின்றனர்.

- நாங்கள் சட்ட விரோதத்தை சட்டவிரோதத்தால் எதிர்க்க விரும்பவில்ல. சட்டவிரோதத்தை சட்டத்தி்ன் மூலம் எதிர்த்து வெல்வோம். நீதியைப் பெறுவோம் என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.

போலீஸாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தற்போது எந்த ஊரில் தான் இருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கவி்ல்லை.

English summary
"I am reaching out to you as I am traveling and on tour to various places. As you all know, I am away from Bidadi ashram for past one month after taking over as Madurai Aadheenam, since a lot of new projects are being launched. I came to Bangalore for 1-2 days just to take care of some important work and to clarify matters for the media through a press meet. I heard about the problems caused in the Bidadi ashram by the anti-social elements, but thanks to the timely intervention of the Bidadi and Ramangara police, all matters are under control", said Nithyanantha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X