For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டு புழக்கம்: 4 பேர் கைது

Google Oneindia Tamil News

கொல்லம்: கேரளாவில் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கண்ணூர் அருகே உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட இடம் மாஹூ. இங்குள்ள ஒரு மதுக்கடையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரோஸ் என்பவர் ரூ.3,000 கொடுத்து மது வாங்கினார். அவர் கொடுத்த நோட்டுகள் மீது சந்தேகம் அடைந்த மதுக்கடை ஊழியர்கள் மாஹூ போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரித்தபோது அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரோசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கள்ளநோட்டு கும்பலிடம் இருந்து அதனை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து மாஹூ பகுதியைச் சேர்ந்த தாஜுதீன், சுலாகு, ரமீஷ், உமர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை தலச்சேரி நீதி்மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். தாஜுதீன் தலைமையில் செயல்பட்டு வந்த இந்த கும்பல் கேரளாவில் பல பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரோஸ் கொடுத்த கள்ளநோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala police have arrested 4 persons for circulating fake currency notes printed in Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X