நெல்லையப்பர் கோவில் உண்டியல் வசூல் ரூ.9.57 லட்சம், 85 கிராம் தங்கம், 160 கிராம் வெள்ளி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ. 9 லட்சத்து 57 ஆயிரத்து 728 கிடைத்துள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படும். வரும் 24ம் தேதி ஆனி திருவிழா தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி நெல்லையப்பர் கோவில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, துணை கோவில்களான சங்கிலி பூதத்தார், பூட்டராத்தி அம்மன் உள்ளிட்ட 32 கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி உதவி ஆணையர் பொன்சுவாமிநாதன் தலைமையிலும், ஆய்வாளர்கள் ஆனந்தன், சுப்புலெட்சுமி, செயல் அலுவலர் நாராயணன் முன்னிலையிலும் நடந்தது.
இப்பணியில் திருக்கோவில் பணியாளர்கள், சந்திப்பு மதிதா இந்து பள்ளி மாணவர்களும் ஈடுபட்டனர். இதில் ரூ. 9 லட்சத்து 57 ஆயிரத்து 728 ரொக்கமும், தங்கம் 85 கிராம், வெள்ளி 160 கிராம் வசூலானது.












Click it and Unblock the Notifications