For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமான 'கூட்டணி'... ஸ்டார் அலையன்ஸ், ஸ்கை டீமுடன் பேசும் ஜெட் ஏர்வேஸ்!

Google Oneindia Tamil News

Jet Airways
டெல்லி: சர்வதேச அளவிலான விமான நிறுவனங்களின் கூட்டமைப்பான ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஸ்கை டீம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் இணைந்து செயல்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர் நரேஷ் கோயல் கூறுகையில், ஸ்டார் அலையன்ஸ் மற்றும் ஸ்கை டீம் ஆகிய இரு அமைப்புகளுடனும் பேசி வருகிறோம். எது சரியாக வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். பிற விவரங்களை அவர் கூற மறுத்து விட்டார்.

ஸ்டார் அலையன்ஸ் அமைப்பில், ஏர் கனடா, ஏர் சைனா, ஏஎன்ஏ, லூப்தன்சா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை இணைந்துள்ளன. இந்த விமான நிறுவனங்கள் உலகம் முழுவதும் 1200 விமான நிலையங்களுக்கு, தினசரி 20,500 விமான சேவைகளை நடத்தி வருகின்றன.

அதேசமயம், ஸ்கைடீம் அமைப்பில் ஏரோபிளாட், ஏர் பிரான்ஸ், சைனா ஈஸ்டர்ன், டெல்டா ஏர்லைன்ஸ் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் 958 இடங்களுக்கு தினசரி 14,700 விமான சேவைகளை நடத்தி வருகின்றன.

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பிரஸ்ஸல்ஸ், மிலன், லண்டன் ஆகிய ஐரோப்பிய நகரங்களுக்கு விமான சேவையை நடத்தி வருகிறது. அதேசமயம், செப்டம்பர் 10ம் தேதி முதல் நியூயார்க்குக்கான விமான சேவையை நிறுத்தி விட அது தீர்மானித்துள்ளது.

English summary
Jet Airways, which has been in advanced talks to join the global airlines' grouping Star Alliance, is also holding discussions with the competing alliance SkyTeam. "We are in talks both with Star Alliance and Sky Team. Let us see what materialises. That is all I can tell you at this point of time," Jet Airways Chairman Naresh Goyal told PTI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X