For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மருத்துவத்துறை முறைகேடு குறித்து ராஜ்சபாவில் பேசும் ஆமீர் கான்

By Siva
Google Oneindia Tamil News

Aamir khan
டெல்லி: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்நிலையில் இது குறித்து அவர் வரும் 21ம் தேதி ராஜ்யசபாவில் பேசவிருக்கிறார்.

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சத்யமேவ ஜெயதே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த மே மாதம் 27ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்க மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்சசியைப் பார்த்த இந்திய மருத்துவக் கழகம் ஆமீர் கான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மருத்துவத்துறை முறைகேடுகள் குறித்து ராஜ்யசபாவில் வந்து பேசுமாறு பாஜக ராஜ்யசபா எம்.பி. சாந்த குமார் ஆமீர் கானுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஆமீர் வரும் 21ம் தேதி காலை ராஜ்யசபாவில் பேசவிருக்கிறார். அவருடன் சத்யமேவ் ஜெயதே குழுவும் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமீர் கானின் டிவி நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Aamir Khan is invited to speak in RajyaSabha about the malpractices in medical sector which he exposed in his TV programme Satyamev Jayate. So, the perfectionist is going to speak in the upper house on thursday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X