For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமின் அறிவிப்பு வேதனை தருகிறது: மம்தா பானர்ஜி

By Chakra
Google Oneindia Tamil News

Mamata Banerjee
கொல்கத்தா: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

அப்துல் கலாம் நேர்மையானவர்; இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. யாரும் சந்தேகிக்க முடியாத நேர்மை மற்றும் உயரிய நற்பண்பு கொண்ட, நாட்டிலுள்ள இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் கலாம், ஜனாதிபதியாக வேண்டும் என, மக்கள் விடுத்த அழைப்பை, சில அரசியல் கட்சிகள் நிராகரித்து விட்டன.

ஊழல் மற்றும் மறைமுக பேரத்தில் ஈடுபட்டுவரும் அரசியல்வாதிகள் (முலாயம் சிங்கை சொல்கிறார்?) மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். சில தன்னலமிக்க அரசியல்வாதிகள், நீதிநெறி பிறழ்ந்து மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்டனர். நாட்டை இருள் சூழ்ந்துள்ளது. பணம், அதிகாரம், ஊழல் மூலம் பொதுநலம், வாழ்வியல் மதிப்பீடுகள் சமரசத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டன.

எனினும், மக்களின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் இந்திய அரசியலை தூய்மைப்படுத்தி, நேர்மை, நீதிநெறிகளை மீட்டெடுப்பார்கள். நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்று மம்தா தெரிவித்துள்ளார்.

English summary
Hours after APJ Abdul Kalam pulled out of the race for the Rashtrapati Bhawan, Trinamool Congress chief Mamata Banerjee said that the decision by the former president to not contest the presidential poll has "hurt deeply". "Kalam Saheb, you have touched our hearts and our spirit…I have seen your statement that you are not contesting. This news has hurt all of us deeply," said the West Bengal Chief Minister in a message on social networking website Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X