ஸ்ரீலங்கா பிரிமியர் லீக்: அதிக தொகை கொடுத்து அணியை ஏலம் எடுத்த இந்திய நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

Sri Lanka Premier League
கொழும்பு: இலங்கையில் நடைபெற உள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் டுவென்டி20 தொடரில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் சில அணிகளின் உரிமைகளை இந்திய நிறுவனங்கள் வாங்கி உள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா அணியில் விளையாட தகுதி கொண்ட பல இளம்வீரர்களை கண்டறிய முடிந்தது.

இந்த நிலையில் இந்தியாவை தொடர்ந்து மற்ற நாடுகளும் பிரிமியர் லீக் டுவென்டி20 தொடர்களை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்காக வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வாரியங்கள் களமிறங்கி உள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள உள்ளூர் அணிகளை கொண்டு ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது. இதற்காக 7 அணிகளை தேர்வு செய்து, அவை ஏலம் விடப்பட்டது. இதில் சில அணிகளின் உரிமையை இந்திய நிறுவனங்கள் வாங்கி உள்ளதாக, கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரர் செய்தித்தாளில் செய்தி வெளியாகி உள்ளது.

இது குறித்து அந்த செய்தித்தாளில் வெளியான செய்தியி்ல கூறியிருப்பதாவது,

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள 7 அணிகளும் சராசரியாக 4.3 மில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக வயம்பா அணியை 5.2 மில்லியன் டாலர் கொடுத்து இந்தியாவின் வதாவன் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது.

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் வீரர்கள், பரிசுத் தொகை ஆகியவை குறித்து இன்னும் முடிவாகவில்லை. முன்னதாக அணிகளின் ஏலத்தில் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பங்கேற்றனர்.

இந்திய வீரர்கள் பங்கேற்பது உறுதி இல்லாத நிலையில், ஐபிஎல் தொடரில் அணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமை தொகையை விட மிக குறைவாகவே ஏலம் விலை நிர்ணயிக்கப்பட்டது. அணிகளை ஏலம் எடுத்துள்ள உரிமையாளருக்கு அணிகள் 7 ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் துவங்க உள்ள ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் தொடர் மொத்தம் 24 போட்டிகளை கொண்டது. கொழும்பு மற்றும் கண்டி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். தொடரின் இறுதிப் போட்டி அகஸ்ட் 31ம் தேதி நடைபெறும்.

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் விபரம்:

அணிகள் (மதிப்பு மில்லியன் டாலர்களில்) உரிமையாளர்கள்

வயம்பா (5.02)- வதாவன் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிட்டேட்

கண்டுரதா (4.98) - நம்பர் ஒன் ஸ்போர்ட்ஸ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட்டேட்

ருஹ்னா (4.6) - பியர்ல் ஓவர்சீஸ் லிமிட்டேட்

யுவா (4.6) - சக்ஷ்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டேட்

பாஸ்னஹிரா (4.33) - இந்தியன் கிரிக்கெட் துந்தீ லிமிட்டேட்

உத்ரா (3.4) - ருத்ரா ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டேட்

நாகேனஹிரா (3.22) - வரூன் பிவ்ரேஜ் லங்கா பிரைவேட் லிமிட்டேட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+