For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தலுக்காக பெட்ரோல் விலையை குறைச்சுட்டாங்க.. அப்புறம் கூட்டுவாங்க: மமதா காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

Mamata banerjee
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதையொட்டியே பெட்ரோல் விலையை குறைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மமதா பானர்ஜி, தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையை குறைத்திருக்கின்றனர். குடிரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் விலை உயரும் என்றார் அவர்.

மேலும் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துபோய்விட்ட நிலையில் ஒரு லிட்டருக்கு ரூ10 லிருந்து ரூ30 வரை விலையைக் குறைக்கலாம் என்றும் மமதா சுட்டிக் காட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தியதற்கு அதன் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் கடுமையாக எதிர்த்தது. அப்துல்கலாமை முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொண்டும் அது நிறைவேறவில்லை. இந்நிலையில் மத்திய அரசை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார் மமதா என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Refusing to attach much importance to the cut in petrol prices announced on Thursday, West Bengal Chief Minister Mamata Banerjee alleged that the rates have been lowered in view of the upcoming presidential poll and these would be raised later.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X