For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: மன்மோகன்சிங்குக்கு பெளத்த பிக்குகள் கட்சி கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

karunanidhi and Manmohan singh
கொழும்பு: திமுகவின் முயற்சியில் நடைபெற உள்ள தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் டெசோ மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இலங்கையின் பெளத்த பிக்குகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மன்மோகன்சிங்குக்கு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் இந்தியாவில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக நாம் அறிகிறோம். தமிழர்களுக்கு தனியான தாயகம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரகடனப்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாக்க கொண்டுள்ளது. பல துன்பமான சம்பவங்களுக்கும் பயங்கரவாத யுத்தத்திற்கு வழிவகுத்ததுதான் தனிநாடு அமைப்பதற்கான 1976 ஆம் ஆண்டு தீர்மானம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கையில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.. இதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம். நட்பு நாடு என்ற அடிப்படையில் அத்தகைய நடவடிக்கைள் இடம்பெறுவதை நாம் எப்போதும் அனுமதிக்கமட்டோம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

English summary
Sri Lanka's Jathika Hela Urumaya has opposed TESO conference on August 5 in Tamil Nadu. It has written a letter to the PM in this regard.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X