For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொழும்பில் சிவசங்கர் மேனன் - மகிந்த ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தினார்

By Mathi
Google Oneindia Tamil News

Rajapaksa and Shiv Shankar Menon
கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

இலங்கைக்கு சிவசங்கர் மேனன் நேற்று இரவு சென்றடைந்தார். இன்று காலை அவர் மகிந்த ராஜபக்சவை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். சிவசங்கர் மேனனுடன் இந்திய இணை செயலாளர் ஹர்ஷ்வர்தனும் சென்றிருந்தார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை, மறுசீரமைப்பு பணிகள், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணைய தளம் தெரிவிக்கிறது.

மேலும் இலங்கையின் கிழக்கில் சம்பூரில் இந்தியா உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

English summary
National Security Advisor Shiv Shankar Menon who arrived in Colombo last night met Sri Lankan President Mahinda Rajapaksa this morning. Menon is accompanied by the Joint Secretary Harsh Vardhan Shringla.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X