அமைச்சராக்க விரும்பிய வாஜ்பாய்!.. ஏற்க மறுத்த அப்துல் கலாம்!

இந்தத் தகவல் அப்துல் கலாம் சமீபத்தில் வெளியிட்ட Turning Points: A Journey Through Challenges என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நான் இருந்தபோது 1998ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி இரவு வாஜ்பாய் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்துவிட்டேன். உங்களையும் சேர்க்க விரும்புகிறேன் என்று வாஜ்பாய் கூறினார்.
இது குறித்து முடிவெடுக்க எனக்கு அவகாசம் வேண்டும் என்று கேட்டேன். இதையடுத்து நாளைக் காலை 9 மணிக்கு தன்னை வந்து பார்க்குமாறு வாஜ்பாய் என்னிடம் கூறினார்.
இதையடுத்து நள்ளிரவில் எனது நண்பர்களை வரவழைத்து இதுகுறித்து விவாதித்தேன். நள்ளிரவு 3 மணி வரை ஆலோசித்தோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 முக்கிய திட்டங்களில் (அணுகுண்டு, அக்னி ஏவுகணை) நான் முழுமையாக பங்கேற்றிருப்பதால் அதைவிட்டுவிட்டு அரசியலில் நுழையக்கூடாது என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
மறுநாள் காலை டெல்லி சப்தர்ஜங் சாலையில் உள்ள பிரதமர் வாஜ்பாயின் வீட்டுக்கு 7 மணிக்கு சென்று அவரிடம, நானும் எனது இரு குழுவினரும் நாட்டுக்கு மிக அவசியமான ஆராய்ச்சிகளில் இருக்கிறோம்.
ஒன்று அக்னி ஏவுகணை, இன்னொன்று அணு குண்டு தயாரிப்பு. நான் அமைச்சராவதை விட இந்தப் பணிகளில் எனது முழு நேரத்தை செலவிடுவதே தேசத்துக்கு அதிக சேவை செய்வதாக இருக்கும் என்றேன். எனவே என்னை தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றேன்.
இதைக் கேட்ட வாஜ்பாய், உங்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டேன். உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.. உங்கள் ஆராய்ச்சிகளைத் தொடருங்கள். கடவுள் துணை புரியட்டும் என வாழ்த்தி அனுப்பினார் என்று எழுதியுள்ளார் கலாம்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications