For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐ உடன் எனக்குத் தொடர்பில்லை.. பிரணாப் முகர்ஜி!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: தலைப்பைப் பார்த்தவுடன் மிரண்டுவிட வேண்டாம். இது பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ இல்லை. இது நம் ஊர் Indian Statistical Institute.

ஜனாதிபதி பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்பவர் வேறு எந்த அரசுப் பதவிகளிலும் இருக்கக் கூடாது என்பது விதி. இதனால் தான் தனது நிதியமைச்சர் பதவி, மத்திய அமைச்சரவைக் குழுக்களின் தலைவர் பதவி, மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தார் பிரணாப்.

ஆனால், அவர் இந்திய புள்ளிவிவரக் கழகமான Indian Statistical Institute அமைப்பின் தலைவராக உள்ளதாகவும், இதனால் அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி ஜனாதிபதி பதவி போட்டி வேட்பாளரான சங்மா தேர்தல் ஆணையத்தைக் கோரினார்.

ஆனால், இதை பிரணாப் முகர்ஜி தரப்பு மறுத்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஒரு வாரம் முன்பே, அதாவது ஜூன் 20ம் தேதியே பிரணாப் இந்தப் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாகவும், மேலும் அது ஒரு கெளரப் பதவி தான் என்றும், இதற்காக பிரணாப் எந்த ஊதியமும் பெறவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

English summary
Pranab Mukherjee’s office has responded to charges filed by the lawyers of PA Sangma, saying that he was no longer associated with the Indian Statistical Institute, adding that even while he was with the institute he did not receive any financial benefit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X