For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷியாவில் வரலாறு காணாத வெள்ளம்- 146 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷியாவில் நிராஸ்னோடார் பகுதியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டதில் 146 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ரஷியாவின் கருங்கடல் அருகே உள்ள இப்பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. பெருமழையால் கிரிம்ஸ்க் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பெரும்பலான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 146 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காணவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரிம்ஸ்க் நகரை அதிபர் விளாடிமிர் புதின் நேரில் பார்த்து ஆய்வு மேற்கொண்டார். மீட்பு பணிகளை துரிதப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜெலன் டிஸ்க் நகருக்கும் சென்று அவர் பார்வையிட்டார்.

English summary
Russia is reeling from devastating flash floods in its southern Krasnodar region where at least 146 people were killed and 29,000 remained without power in the region's worst natural disaster in history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X