For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் பாதியிலேயே ஆட்சியை இழந்துடுவிடும் ஒக்கலிகா சமூக முதல்வர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த பலரும் முதல்வராகி இருந்தாலும் ஒருவர் கூட 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யவில்லை என்பதுதான் விசித்திரம்!

ஹனுமந்தையா, மஞ்சப்பா, தேவ கவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, சதானந்த கவுடா ஆகியோர் கர்நாடகத்தில் முதல்வர் பதவி வகித்த ஒக்கலிகா சமூகத்தினர் ஆவர். இதில் பழைய மைசூர் மாநிலத்தின் முதல்வராக 1952-ம் ஆண்டு மார்ச் 30 முதல் 1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 வரை பொறுப்பு வகித்தவர் ஹனுமந்தையா. கர்நாடக மாநிலம் உருவாக்கப்படுவதற்காக அவர் தமது முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய நேரிட்டது. பின்னர் 1962ஆம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1956ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 1956 அக்டோபர் 31 வரை மஞ்சப்பா முதல்வராக பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் நிஜலிங்கப்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.

கர்நாடக மாநிலத்தின் 14-வது முதல்வராக 1994ஆம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தேவ கவுடா பொறுப்பு வகித்தார். அவர் அதன் பின்னர் பிரதமரானார்.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை காங்கிரஸ் சார்பில் எஸ்.எம். கிருஷ்ணா மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார். ஆனால் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்தது.

அதன் பின்னர் 2006-ம் ஆண்டு பிப்ரவரி 4 முதல் 2007-ம் ஆண்டு அக்டோபர் வரை 20 மாத முதல்வராக இருந்தார் ஹெச்.டி. குமாரசாமி.

இந்த வழியில்தான் மாநிலத்தின் 26-வது முதல்வராக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி பொறுப்பேற்ற சதானந்த கவுடா நேற்று தமது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்து ஒக்கலிகா சமூகத்துக்கு என்ன சாபமோ ஒருவர் கூட ஒருமுறை கூட ஐந்து ஆண்டுகால முதல்வர் பதவியை அனுபவித்த வரலாறு இல்லை!

English summary
With the BJP deciding to make Jagadish Shettar the next chief minister, DV Sadananda Gowda has become the latest chief minister belonging to the Vokkaliga community who could not complete their terms. No chief minister belonging to Vokkaliga community has been able to complete their five-year term in Karnataka since 1956. Kengal Hanumanthaiah, Kadidal Manjappa, HD Deve Gowda, HD Kumaraswamy and DV Sadananda Gowda had to make way for others due to developments which have been witnessed in the state since 1956.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X