For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.இ. கவுன்சிலிங் இன்று துவக்கம்: 1 லட்சம் பேர் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

Anna university
சென்னை: பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 504 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

தொழிற்கல்விக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 7ம் தேது துவங்கி 11ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து விளையாட்டு கோட்டா மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 9 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து நேற்று மாற்றுத்திறனாளிக்கான கலந்தாய்வு நடந்தது.

இதையடுத்து பொது கலந்தாய்வு இன்று காலை துவங்குகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் பழனிச்சாமி துவக்கி வைக்கும் இந்த கலந்தாய்வில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவியர் கலந்து கொள்கின்றனர். பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் தலைமையிலான குழு கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இன்று துவங்கும் பொது கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறுகிறது. பிள்ஸ டூ பொதுத்தேர்வில் தோல்வியடைந்து உடனடியாக சிறப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதிக்கு பிறகு நடைபெறும்.

English summary
BE counselling starts today at Anna university. Higher education minister K. Palanisamy will kick start the general counselling in which more than 1 lakh students will particiapate.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X