டெஸ்ட் டியூப் பேபி சர்லோட் கோல்ம்ஸ் மிஸ் வேர்ல்ட் இறுதிச்சுற்றில் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
Charlotte Holmes
லண்டன் : டெஸ்ட் டியூப் மூலம் பிறந்த பெண் குழந்தை இன்றைக்கு மிஸ் வேர்ல்ட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சர்லோட் கோல்ம்ஸ் என்ற அந்த பெண் ஏற்கனவே மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வென்றுள்ளார்.

1988ம் ஆண்டு வான்னி - கென் தம்பதியருக்கு பேராசிரியர் வின்ஸ்டன் என்பவர் ஐவிஎப் சிகிச்சை மூலம் குழந்தையை உருவாக்கினார். சர்லோட் கோல்ம்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தைதான் இன்றைக்கு வளர்ந்து மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்று அடுத்தவாரம் சீனாவில் நடைபெற உள்ள மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற தயாராகிவருகிறார்.

உலக அழகி போட்டிக்காக சீனா செல்லும் சர்லோட் 119 அழகிகளுடன் இந்தப்பட்டத்திற்காக போட்டி போடுகிறார். மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்றதன் மூலம் உலக அழகிப்போட்டியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்ததாக கூறும் சர்லோட், இந்த போட்டியில் பங்கேற்பதை தன்னால் வார்தைகளில் விவரிக்க இயலவில்லை என்று கூறியுள்ளார். மிஸ் இங்கிலாந்து பட்டத்திற்கான போட்டியில் என் பெயர் அறிவிக்கப்பட்டபோது என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. அப்பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் எட்டிப்பார்த்தது என்று மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற நிமிடத்தை நினைவுகூர்கிறார்.

எட்டாண்டுகள் குழந்தை இல்லாமல் சிரமப்பட்ட தங்களுக்கு பேராசிரியர் வின்ஸ்டனிடம் சிகிச்சைக்கு சென்ற பின்பே டெஸ்ட் டியூப் மூலம் இந்த குழந்தை பிறந்தது என்று சர்லோட்டின் தந்தை கென் கூறியுள்ளார். அவருக்கு தற்போது 64 வயதாகிறது. கணினித்துறையில் பிஸினஸ் செய்து வருகிறார். சர்லோட்டின் தாயார் வான்னிக்கு தற்போது 60 வயதாகிறது. தங்களுக்கு பிறந்த குழந்தை தற்போது உலக அழகிப்போட்டி பட்டம் வெல்வதற்கு தயாராகிவருவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பெருமை கொள்வதாகவும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CHARLOTTE HOLMES has an unlikely hero to thank for her new reign as Miss England – telly professor Robert Winston. She would not be here without the doctor, who accepted her parents on his pioneering IVF programme when they were desperate for a child.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற