வடமாநில மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கமிஷன் பெறுவதில் மோதல் - சக மாணவரை கடத்திய 6 பேர் கைது
சென்னை: சென்னையில் கல்லூரியில் மாணவர்களை சேர்த்து விடுவதற்காக கிடைக்கும் கமிஷன் தொகையை பங்கு போடுவதில் கல்லூரி மாணவர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ்குமார் என்பவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்து வருகிறார். அத்துடன் வட மாநில மாணவர்களை கல்லூரியில் சேர்த்துவிட்டு அதற்காக கமிஷன் தொகையையும் பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு ஒடிஷாவைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்ற மாணவர் ராமாபுரம் கல்லூரியில் சேருவதற்காக சூரஜ்குமாரிடம் ரூ1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களைக் கொடுத்து வைத்திருந்தார். இதைப் பார்த்த சூரஜ்குமாருடன் தங்கியிருந்த சக மாணவரான பப்பு, தமக்கும் கமிஷன் தொகையில் பாதி தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் சூரஜ்குமார் கொடுக்கவில்லை.
இதைத் தொடர்ந்து பப்பு, காசோலை மற்றும் சான்றிதழ்களுடன் தலைமறைவாகிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த சூரஜ்குமார், பப்புவை தொடர்பு கொண்டு தாம் பணம் தருவதாகவும் காசோலை மற்றும் சான்றிதழை ஒப்படைத்துவிடுமாறும் கூறியிருக்கிறார். இதை நம்பி பப்புவும் சான்றிதழ் மற்றும் காசோலையுடன் சூரஜ்குமாரை சந்திக்க ராமாபுரம் சென்று கொண்டிருந்தார். பப்பு ஆட்டோவில் வருவதை தெரிந்த சூரஜ்குமாரும் அவனது நண்பர்களும் ஆட்டோ வழிமறித்து பப்புவை கடத்திச் சென்றனர். விருகம்பாக்கத்தில் உள்ள வீடு ஒன்றில் பப்புவை அடைத்து வைத்து காசோலை மற்றும் சான்றிதழ்களைப் பறித்துக் கொண்டது சூரஜ்குமார் கோஷ்டி.
பப்பு கடத்தப்பட்ட தகவலை அவர் சென்ற ஆட்டோ டிரைவர் போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சூரஜ்குமார் கோஷ்டிக்கும் பப்புவுக்கும் இடையே நடந்த கமிஷன் தகராறு விவகாரம் தெரிய வந்தது.
இதையடுத்து பப்புவை சூரஜ்குமார் கோஷ்டியிடமிருந்து மீட்டு அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சூரஜ்குமார் மற்றும் அவனது நண்பர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications