For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக "பலி கொடுக்கப்படும்" ஈரான்: இஸ்ரேல் போர் தொடுக்கும் அபாயம்

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவில் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் யூதர்களின் வாக்குகளை அறுவடை செய்வதற்காகவே அனேகமாக ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கக் கூடிய நிலை உருவாகியிருக்கிறது.

அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவும் குடியரசுக் கட்சி சார்பில் மிட்ரோம்னியும் போட்டியிடுகின்றனர். இருவரும் வாக்கு அறுவடைக்காக அனைத்துவிதமான யுக்திகளையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்து வந்தது இந்தியாவுக்கு அவுட்சோர்சிங் வேலை வாய்ப்புகளை கொடுத்த விவகாரம்தான். இந்த அவுட்சோர்சிங் விவகாரம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ அமெரிக்க தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்திகளான யூதர்கள் வாக்குகளைக் கவருவதற்கு எந்த எல்லைக்கும் செல்ல இரண்டு வேட்பாளர்களும் முடிவு செய்துள்ளனர்.

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் மிகவும் முனைப்பு காட்டியது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவோ இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இருப்பினும் ஈரான் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. இது யூதர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அமெரிக்கா வாழ் யூதர்களும்

மேலும் தேர்தலும் நெருங்கிவிட்ட நிலையில் இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலை இரண்டு வேட்பாளர்களும் தூண்டிவிட்டு வருகின்றனர். அண்மையில் இஸ்ரேல் சென்ற ஒபாமாவின் ஆலோசகர் டோனிலான் பிரதமர் நெதான்யாஹூவை சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின் போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மற்றொரு வேட்பாளரான மிட்ரோம்னியோ ஈரான் மீது இஸ்ரேல் கண்டிப்பாகத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் இஸ்ரேல் பயணத்தையும் மேற்கொண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று கூறியிருக்கிறார்.

English summary
Terming Iran's nuclear "capabilities" an "incomparable" threat, Romney insisted he would endorse any measures taken by Israel against them, adding that he believes it is a moral imperative to stop Iran from acquiring any nuclear program at all.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X