சரமாரியாக மின்சாரத்தை 'ஓவராக' எடுத்ததால் வந்த வினைதான் வட மாநில மின் தடை!

கடந்த 3 நாட்களாக வட மாநிலங்களில் கிரிடு பாதிப்பால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பெரும் நஷ்டமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மின்தடையால் நாட்டின் பாதிப் பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது.
இந்த நிலைக்கு முக்கியக் காரணம், வட மாநிலங்கள் பல தாறுமாறாக அளவுக்கு மீறி மின்சாரத்தை எடுப்பதுதான் என்று கூறப்படுகிறது. இதில் உ.பி.தான் முன்னணியில் உள்ளது.
பருவ மழை குறைந்து போய் விட்ட காரணத்தால் நீர் மின்சார உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலும் தொடர்ந்து கொளுத்தி வருவதால் மக்களின் மின்சாரப் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் மின்சாரத்தின் தேவை பெருமளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வட மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பெருமளவில் கூடுதலாக எடுக்கப் போய் சப்ளை கிரிடு டிரிப் ஆகி செயலிழந்து போய் விட்டது. இதனால்தான் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள 19 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டு அவை இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டு விட்டது.
வட மாநிலங்களைப் பொருத்தவரை உ.பிதான் இந்த கூடுதல் மின் எடுப்பில் முன்னணியில் உள்ளது. அடுத்த இடத்தில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகியவை உள்ளன.
இதில் உ.பிதான் பெரும் அநியாயம் செய்கிறதாம். தொடர்ந்து பெருமளவிலான மின்சாரத்தை இந்த மாநிலம்தான் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதையடுத்து இந்த மாநில மின் வாரிய தலைமை பொறியாளருக்கு மத்திய மின்சார முறைமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி டெல்லிக்கு அழைத்துள்ளது.
அதேபோல ஹரியானாவும், பஞ்சாபும் கூட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட மிகப் பெரிய அளவில் மின்சாரத்தைத் திருடுகின்றனவாம். இவற்றுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உ.பியில், மாயாவதி முதல்வராக இருந்தவரை இந்த அளவுக்கு மின்சாரத்தை திருடவில்லையாம். காரணம், அவர் தனது மாநிலத்திற்குத் தேவையான மின்சாரத்தை சட்டிஸ்கர், குஜராத், மேற்கு கிரிடிலிருந்து பெற்று விநியோகித்துள்ளார். ஆனால் முலாயம் சிங்கின் கட்சி வெற்றி பெற்று அங்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் பதவிக்கு வந்தது முதலே வடக்கு கிரிடில் பெருமளவில் கை வைத்து வருகிறார்களாம். இதை மத்திய அரசோ, மத்திய மின்துறை அமைச்சரோ தட்டிக் கேட்காமல் இருந்துள்ளனர். இதனால்தான் தற்போது கிரிடே அடிபட்டுப் போகும் அளவுக்கு கரண்ட்டை உறிஞ்சிக் குடித்துள்ளனர் உ.பி. மாநிலத்தவர்.
உ.பி. மாநில மின்வாரியம் கூடுதலாக எடுத்துள்ள மின்சாரத்தின் அளவு என்ன தெரியுமா... டெல்லி போன்ற பெரிய நகரங்களுக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு திருடி வந்துள்ளனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications