For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியை பிரதமராக்க நிதிஷ்குமார் மீண்டும் எதிர்ப்பு- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Nitish Kumar
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தக் கூடாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் கடந்த 25-ந் தேதியன்று பாஜக தலைவர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்த போது இது தொடர்பாக விவாதித்திருக்கிறார். இச்சந்திப்பின் போது மோடியை பிரதமர் வேட்பாளராக்க முன்னிறுத்துவது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஒருமித்த முடிவின் அடிப்படையிலேயே பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் கட்காரி கூறியுள்ளார்..

நிதிஷ்குமாரைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற அடையாளம் கொண்ட ஒருவர்தான் நாட்டின் பிரதமராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இதை கடுமையாக எதிர்த்துள்ளது. "இந்துத்துவா கொள்கையை கடைபிடிக்கக் கூடிய ஒருவர்தான் நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

English summary
JD(U) leader and Bihar Chief Minister Nitish Kumar reportedly asked BJP president Nitin Gadkari for not to project Narendra Modi as NDA’s Prime Ministerial candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X