For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இளவரசி' பிரியங்காவை தேர்தல் களத்தில் இறக்கும் காங்கிரஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

Priyanka Gandhi
டெல்லி: ராகுல்காந்தி தீவிர அரசியலுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகியும் அவரால் எந்த பயனும் ஏற்படவில்லை.. மாறாக கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட நிலையில்தான் காங்கிரஸ் இருக்கிறது.. பேசாமல் இந்திராவைப் போன்ற சாயலில் இருக்கும் பிரியங்கா காந்தியை களமிறக்கிப் பார்த்தால் என்ன? என்ற புதுக் கணக்கில் யூக செய்திகளை களத்தில் இறக்கிவிட்டிருக்கின்றனர் காங்கிரஸ் பெருந்தலைகள்.

ராகுல் காந்தி தீவிர அரசியலில் 2004-ம் ஆண்டு இறங்கியிருந்தார். அவரால் காங்கிரஸுக்கு விமோசனம் கிடைத்துவிடும்..எப்படியும் காங்கிரஸ் மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து விடும்... உத்தரப்பிரதேசத்தில் இருந்த சரிவில் இருந்து மீள்வோம் என்றெல்லாம் 8 ஆண்டுகாலமாக கனவு கொண்டிருந்த காங்கிரஸ் தலைகளுக்கு ராகுலால் தலைவலிதான் மிச்சம். ராகுலின் இமேஜால் வாக்கு வங்கிகள் பெருகாவிட்டாலும் பரவாயில்லை.. இருந்த வாக்கு வங்கிகளும் பறிபோய்க் கொண்டிருப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது...

இதனால் ராகுலின் இமேஜை இன்னும் கூட்டிப் பார்க்க சில காங்கிரஸ் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். அதாவது கட்சியிலும் ஆட்சியிலும் ராகுலுக்கு கூடுதல் பொறுப்பை கொடுத்துப் பார்த்தாவது ஏதாவது தேறுமா என கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றது ஒரு குரூப்...

"எதுக்குமே லாயக்கே இல்லாத" ராகுலை நம்பிக் கொண்டிருப்பது இனியும் பயனில்லை என்று பொருமிக் கொண்டிருக்கிறது இன்னொரு காங்கிரஸ் குரூப். அதுவும் பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டிருக்கும் புது குண்டால் இந்த குரூப் இப்பொழுது ரொம்பவுமே உஷாராகிவிட்டது.. ஒவ்வொரு தேர்தலிலும் கொஞ்ச நஞ்சம் மானத்தைக் காப்பாற்றும் வகையில் மக்களவைத் தொகுதிகளில் சீட்டுகளை வாங்கிக் கொண்டிருந்த காங்கிரஸுக்கு வரும் தேர்தலில் 100 இடத்துக்கும் குறைவாகத்தான் கிடைக்கும் என்று அத்வானி ஜோசியம் ரொம்பவே ஆடிப் போக வைத்திருக்கிறது.

ராகுலை நம்பியும் இனி பயனில்லை என்ற முடிவில் ராகுலுக்கு மாற்றாக பிரியங்காவை களமிறக்குவதற்கான முயற்சிகளில் அந்த குரூப் தீவிரம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. பிரியங்காவும் கூட இதற்கான முன்னேற்பாடுகளில் இருப்பதாகவே கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி மக்களுடன் பிரியங்கா எப்போதும் தொடர்பில் உள்ளார் என்றும், இதில் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரேபரேலி தொகுதியை குறிவைத்து மக்களவைத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடுவார் என்றும் இதற்காகவே ஒவ்வொரு புதன்கிழமையும் ரேபரேலி மக்களை சந்திக்கவும் பிரியங்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திரா காந்தியைப் போன்ற தோற்றம் கொண்ட பிரியங்கா நாடு முழுவதும் தீவிர அரசியலில் ஈடுபட்டால், கட்சியின் பலம் மேலும் அதிகரிக்கும் என்பதும் பிரியங்கா ஆதரவு குரூப்பின் கருத்து.

ராசியில்லாத ராஜா ராகுலை கழட்டிவிட்டு இளவரசி பிரியங்காவுக்கு அரியாசனம் அளிகக்த் துடிக்கும் காங்கிரஸ் தலைகளின் கனவு பலித்துவிடுமா என்ன?

English summary
Priyanka Gandhi may be heading for an active role in politics and is said to be set to take charge of her mother and Congress President Sonia Gandhi‘s Rae Bareli Parliamentary constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X