For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெசோ மாநாடு: சென்னை வர இலங்கை இடதுசாரி தலைவருக்கு இந்தியா விசா மறுப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Wickramabahu Karunaratne
கொழும்பு: திமுக தலைவர் கருணாநிதி நடத்தும் டெசோ மாநாட்டில் பங்கேற்க சென்னை செல்ல
இலங்கையின் இடதுசாரி கட்சியின் தலைவரான டாக்டர் விக்ரமபகு கருணாரத்னேவுக்கு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் விசா தர மறுத்துவிட்டது.

இது கருணாநிதியின் டெசோ மாநாட்டை சீர்குலைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

இலங்கைத் தமிழரகளுக்கு சுய அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் தீவிரமாக இருப்பவர் கருணாரத்னே. இதனால் டெசோ மாநாட்டில் பங்கேற்க இவருக்கு கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியத் தூதரகத்திடம் விசா கோரிய கருணாரத்னேவுக்கு அதை வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுடன் கருணாநிதி பேசுவார் என்று கருணாரத்னே தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள எஸ்எம்எஸ்சில் தெரிவித்துள்ளார்.

English summary
Political sources say that the High Commission of India has denied visa to Dr. Wickramabahu Karunaratne, the leader of Left Front to enter India. Wickramabahu, an ardent supporter of Tamil's self-determination has planned to participate in the Tamil Eelam Supporters Organization (TESO) conference. In a SMS update sent to his supporters, Karunaratne has said that former Tamil Nadu Chief Minister Karunanidhi will take up the matter with the central government of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X