For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வினாத்தாள் அவுட் விவகாரம் எதிரொலி: டி.என்.பி.சி. குரூப் 2 தேர்வு ரத்து!

By Mathi
Google Oneindia Tamil News

Natraj
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்- 2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தையடுத்து அத்தேர்வை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த உடனேயே வினாத்தாள் முன்னரே வெளியாகிவிட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் முழுவதும் நெட் ஒர்க் அமைத்து வினாத்தாளை அவுட்டாக்கிய விவரம் அம்பலமானது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வினாத்தாள் அவுட் ஆன விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நட்ராஜ் இன்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நட்ராஜ், நேற்று நடத்தப்பட்ட குரூப் -2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் புதிய வினாத்தாள் அமைக்க புதிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இக்குழுவில் 4 அல்லது 5 பேர் இடம்பெற்றிருப்பர் என்றும் நட்ராஜ் தெரிவித்துள்ளார். புதியதாக நடத்தப்படும் தேர்வை நேற்று தேர்வு எழுதிய அனைவரும் எழுதலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

English summary
After the Test paper leaked the Tamil Nadu Public Service Commission Group II exam has cancelled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X