Seeman: அண்ணண் பேரு எங்கங்க! எக்ஸிட் போலில் சீமானுக்கு எத்தனை தொகுதிகள்? பங்கம் செய்த நெட்டிசன்ஸ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் 2026-க்கான எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் சீமான் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த கணிப்புகளும் கூறவில்லை. இதை வைத்து நெட்டிசன்கள், தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.. சீமான் பெயரே எக்ஸிட் போலில் இல்லையே என்று பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் தொடர்பாக வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.

டைம்ஸ் நவ், ஜேவிசி உள்ளிட்ட நிறுவனங்கள் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன. அதே நேரத்தில் காமக்யா மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்டவை தவெகவிற்கு அதிக சீட்டுகளை வாரி கொடுத்துள்ளன. அதிலும் ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்து கணிப்பு படி 90 முதல் 120 சீட்டுகள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என கணித்துள்ளன. இதனால் உற்சாகம் அடைந்த தவெகவினர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அடுத்த முதல்வர் விஜய் தான் எனவும், 1977-ல் ஏற்பட்டது போல ஆட்சி மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் விஜய் அடுத்த எம்.ஜி.ஆர் அல்ல.. முதல் விஜய் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் தெறித்து வருகின்றன. அடேய் கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. வந்து இருப்பது எக்ஸிட் போல்தான்..
இந்த கருத்துகணிப்புகள் எல்லாம், தலைகீழாய் மாறிய வரலாறுகளும் நிறைய உள்ளன என்றும் மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் இதுபற்றிய விவாதங்களும், நையாண்டி பதிவுகளும் என எக்ஸிட் போல் குறித்த பதிவுகளே நிரம்பி வழிகின்றன. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி எத்தனை வாக்கு சதவீதம் வாங்கும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
கடந்த தேர்தலில் 8 சதவீத வாக்குகளை சீமான் பெற்ற நிலையில், இந்த முறை எத்தனை சதவீதம் பெறும்? எத்தனை தொகுதிகளிலும் வெல்லும்? என்ற எதிர்பார்ப்பும் நாம் தமிழர் தம்பிகளிடம் மேலோங்கி உள்ளது. அதேநேரத்தில் எக்ஸிட் போல் முடிவுகளில் சீமான் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எந்த கணிப்புகளும் கூறவில்லை.
இதை வைத்து நெட்டிசன்கள், தங்களுக்கே உரிய நகைச்சுவை பாணியில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.. சீமான் பெயரே எக்ஸிட் போலில் இல்லையே என்று பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சீமான் தனது அக்கா பத்திரிகை கொடுப்பதை பார்த்து அதில் சின்னவன் பெயரே இல்லை என்று சொல்லும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் , மாட்ரிஸ் 0-6 இடங்களில் நாம் தமிழர் கட்சி என்று குறிப்பிடாமல் பிற கட்சிகள் வெல்லும் என கணித்துள்ளது. பி மார்க் 1-6, பியூப்பிள் பல்ஸ் 2 -6 இடங்களில் பிற கட்சிகள் வெல்லும் என்று கணித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications