For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று ரம்ஜான்... வரலாறு காணாத பலத்த பாதுகாப்பில் பெங்களூர்!

Google Oneindia Tamil News

Bangalore
பெங்களூர்: பெங்களூர் முழுவதும் ரம்ஜான் பண்டிகையையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரில் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில் பெங்களூர் முழுவதும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சில பகுதிளில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் இன்றுதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையி்ல் பெங்களூரில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி கூறுகையில், மொத்தம் 17,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் மத்திய ரிசர்வ் போலீஸார், ரேபிட் ஆக்ஷன் போர்ஸ், கர்நாடக சிறப்புப் போலீஸார் உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் ரம்ஜான் பண்டிகைக்கு இதுவரை இவ்வளவு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதில்லை. இப்போதுதான் முதல்முறையாக செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பெங்களூரை விட்டும், கர்நாடகத்தை விட்டும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது காவல்துறை.

English summary
It seems that Bangalore police do not want to take any risk on the day of Ramazan which will be celebrated on Monday, Aug 20. A large number of officials will be deployed all around the city to provide security to all. Bangalore city police commissioner Jyoti Prakash Mirji on Saturday, Aug 18 announced that total 17,000 security officials have been assigned for the job of maintaining law and order situation in the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X