For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேட்டூர் அணை செப்டம்பர் 17ம் தேதி திறப்பு-ஜெ. அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மேட்டூர் அணை செப்டம்பர் 17ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். குறுவை சாகுபடி விவசாயப் பணிகளுக்காக அணை திறக்கப்படுகிறது.

கர்நாடகத்திலிருந்து போதிய அளவுக்குத் தண்ணீர் வராததால் இந்த ஆண்டும் குறித்த காலத்தில் மேட்டூர் அணையைத் திறக்க முடியவில்லை. இதனால் குறுவை சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியாமல் காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா அவசர ஆலோசனை இன்று மேற்கொண்டார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

குறுவை சாகுபடி விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேட்டூர் அணையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ம் தேதி அணை திறக்கப்படும்.

சமுதாய நாற்றங்கால்களை அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 மானியம் அளிக்கப்படும்.

குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் ஒதுக்கப்படும். இதற்காக ரூ. 1 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

புதிய சாகுபடி பணிகள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக மொத்தம் ரூ. 53.53 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

English summary
Chief Minister Jayalalitha has ordered to open Mettur dam on Sep 17 to save Kuruvai crop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X