For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட் குவாரி அதிபர்களுக்கு ஆதரவாக இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

மதுரை: முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரி அதிபர்களுக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை டி.ஐ.ஜி. பாலநாகதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிரானைட் குவாரிகளில் ரூ.16,000 கோடி முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து இந்த முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்ய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சமூக நல திட்ட தாசில்தார் ருக்மணி, துணை தாசில்தார் மோகன், கிராம நிர்வாக அதிகாரி சுப்புராஜ், செல்வராஜ், சேட்பாபு, பொன்னையா, இளநிலை உதவியாளர் ராஜேந்திரன், வைப்பறை எழுத்தர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காவல் துறையில் உள்ளவர்களில் யார், யார் இந்த முறைகேட்டிற்கு துணை போனார்கள் என்ற பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரி அதிபர்களுக்கு ஆதரவாக இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து டிஐஜி பாலநாகதேவி நேற்று உத்தரவிட்டார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய ராமகிருஷ்ணன் தற்போது விருநகரில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

English summary
Inspector Ramakrishnan was suspended as he acted in favour of those granite quarry owners who are all involved in the scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X