For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேமுதிக கூட்டணி இல்லாவிட்டால் அதிமுக தோற்றிருக்கும்: விஜயகாந்த்

By Chakra
Google Oneindia Tamil News

கடலூர்: தேமுதிக இல்லையென்றால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தொண்டர்களை வைத்து என்ன செய்கிறேன் என்று பாருங்கள் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறினார்.

கடலூர் மாவட்ட தேமுதிக சார்பில் ஏழைப் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜய்காந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் ஏழைப் பெண்களுக்கு ரூ.25 லட்சம் அளவுக்கு உதவிகளை வழங்கினர்.

பின்னர் விஜய்காந்த் பேசுகையில், கடலூர் மக்களை சுனாமியும் தாக்கியது, தானே புயலும் தாக்கியது. புயல் தாக்கியபோது நான் வந்தேன். தானே புயல் பாதிப்புகள் குறித்து எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் பேசியபோது அவர்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் பேச முற்பட்டபோது அதற்கு அத்தாட்சி ஏதும் உள்ளதா? என கேட்டார்கள்.

எங்கள் கட்சி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் பெயரில் போலி கையெழுத்து போட்டு அவருக்கான நிவாரணத்தையும் வாங்கி சென்றுள்ளார்கள் என்பதை ஆதாரத்துடன் காண்பித்தேன் (மேடையில் அந்த சான்றையும் எடுத்து மக்களிடம் காட்டினார்).

தானே புயல் நிவாரண உதவி மக்களை சென்றடையவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் குடிநீர், சாலை, தெரு விளக்கு வசதி கிடைக்கவில்லை.

தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக தடையில்லா மின்சாரம் தருவோம் என்றார்கள். ஆனால் இப்போது நிலைமை என்ன?.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அரிசி உங்கள் வீடு தேடிவரும். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்போம். அதிமுக இல்லை என்றால் தேமுதிக இல்லை என்கிறார்கள். நான் சொல்கிறேன், தேமுதிக இல்லை என்றால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கவே முடியாது.

2014ல் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. தொண்டர்கள் உதவியுடன் என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

18 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை 22 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றினார்கள். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை. எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம், விஜயகாந்த் உண்மையை பகிரங்கமாக செல்வேன். விஜயகாந்த் யாருக்கும் அஞ்சமாட்டான்.

புதுக்கோட்டையில் 32 மந்திரிகளும் காசு கொடுத்தார்கள். விஜயகாந்த் கட்சிக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது என்றார்கள். என்ன ஆனது? விஜயகாந்த் கட்சி பத்தோடு, பதினொன்னு என்றார்கள், இப்போது என்ன ஆச்சு?.

மத்திய அரசு பெட்ரோல் விலையை, சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணையின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது. ஆனால் உலக சந்தையில் சிமெண்டு மூட்டை ரூ.160-க்கு விற்கும்போது இங்கு மட்டும் ஏன் சிமெண்டு மூட்டை ரூ.350-க்கு விற்கிறது?.

தானே புயலில் கொள்ளையடித்தீர்கள், உங்களை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்காதீர்கள். உங்களை மேலே இருந்து தெய்வம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதனால்தான் அந்த தெய்வத்தோடும், மக்களோடும் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம் என்றார் விஜய்காந்த்.

போதையில் தொண்டர்கள்.. குழந்தைகள்-பெண்கள் பட்டபாடு:

முன்னதாக இந்தக் கூட்டத்துக்கு பெண்கள் பலரும் குழந்தைகளோடு வந்திருந்தனர். தேமுதிக தொண்டர்களில் பலர் குடிபோதையில இருந்தனர். விஜயகாந்த் பேச ஆரம்பித்தவுடன் தேமுதிக தொண்டர்கள் மேடை நோக்கி வர முயன்றனர். இதனால் மேடை முன் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகள் நெரிசலில சிக்கினர். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகளைப் பெற வந்த ஊனமுற்றவர்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாயினர்.

தொண்டர்களை போலீசார் எவ்வளவோ முயற்சித்தும் அடக்க முடியவில்லை. தொண்டர்கள் அமைதியாக இருக்குமாறு விஜயகாந்த்தும் எவ்வளவோ கூறியும், அவர்கள் அதற்கு செவிசாய்க்கவே இல்லை.

English summary
DMDK founder-president Vijayakanth has blamed the ADMK for all the problems facing Tamil Nadu. If I was not in the ADMK alliance Jayalalithaa would have been defeated in the last assembly polls, he said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X