For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெட்டிகளுக்கு லைசென்ஸ் தந்ததே காங்கிரஸ்தான்': சுஷ்மா சுவராஜ்

By Chakra
Google Oneindia Tamil News

Sushma Swaraj
டெல்லி: ரெட்டி சகோதரர்களுக்கு சுரங்க உரிமங்களைத் தந்ததே காங்கிரஸ் அரசு தான் என்று மூத்த பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆதாயம் அடைந்ததாக சுஷ்மா குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர்கள் பாஜகவுக்கும் சுஷ்மாவுக்கும் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தனர் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்து சுஷ்மா தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

ரெட்டி சகோதரர்களிடமிருந்து பெரும் தொகை பெற்றது காங்கிரஸ் கட்சிதான். ஒரு முதல்வரின் (மறைந்த ஆந்திர முதல்வர் ஒஸ்.எஸ்.ராஜசேகர ரெட்டி) சிபாரிசின் பேரில் காங்கிரஸ் அரசுதான் ரெட்டி சகோதரர்களின் அனைத்து சுரங்கங்களுக்கும் உரிமம் வழங்கியது.

ரெட்டி சகோதரர்களுக்கு உரிமம் வழங்கிய விவகாரம் குறித்து அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும். பணம் பெற்றது யார் என அப்போது எல்லாருக்கும் தெரிய வரும் என்று கூறியுள்ளார் சுஷ்மா.

சூப்பர் பிரதமராக செயல்படுகிறார் சோனியா-பாஜக:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சூப்பர் பிரதமர் போல செயல்படுகிறார் என்று பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, ஊழலுக்கும், சுரண்டலுக்கும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. அதைப் பற்றி பாஜக உறுப்பினர்கள் பேசினால் மிரட்டல்காரர்கள் என்கிறது காங்கிரஸ்.

பிரதமரை விட மேலதிகாரம் படைத்த "சூப்பர் பிரதமர்' போல் சோனியா காந்தி செயல்படுகிறார் என்றார்.

English summary
Responding to Lalu's allegation that she has been a beneficiary of the wealth of the Reddy brothers, Swaraj asserted, "I demand that all documents related to the recommendations and allotments to Reddy brothers be made public so that the country can know who got them monetary benefits and who made the recommendations for them. All the facts should be placed before the nation."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X